இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகள்
21.10.2021 06:48:40
இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, 3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.
அந்த ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.