இறங்கி அடித்த சந்தோஷ் நாராயணன்
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று மாலை படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. போலீஸ் கெட்டப்பில் கார்த்தி காரில் இருந்து இறங்க, அவரை மேள தாளத்தோடு வரவேற்கிறது ஒரு கூட்டம். அவர்களோடு சேர்ந்து கார்த்தி அலட்டல் இல்லாத ஆட்டம் போட செம்ம vibe ஆன இசையைக் கொடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.
டீசரில் ஏகப்பட்ட இடங்களில் எம் ஜி ஆர் மற்றும் நம்பியார் ரெஃபரன்ஸ் காட்டப்படுகிறது. ஒட்டுமொத்தமாக டீசர் ‘வா வாத்தியார்’ ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும் என்பதைக் கோடிட்டு காட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நலனிடம் இருந்து வரும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.