தேர்தல் ஆணையாளர்கள் நேரில் ஆய்வு

10.02.2021 09:01:49

 

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்குவதற்காக தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வருகைத்தரவுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, பொலிஸ் ஒருங்கிணைப்பு  அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி. ராஜிவ்குமார் ஆகியோருடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து நாளைய தினம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுடன்  தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர் டி.ஜி.பி. மற்றும் மூத்த மாநில அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.