ரஜினி படத்திலிருந்து விலகிய சிபி சக்ரவர்த்தி?!.

13.04.2026 13:46:09

தக் லைப் படத்தை தயாரித்த வகையில் கமல் நஷ்டமடைந்ததால் அவருக்கு உதவ முடிவெடுத்த ரஜினி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க முடிவு செய்தார்,. அதில் ஒன்றுதான் சுந்தர்.சி இயக்கவிருந்த திரைப்படம்.
 

ஆனால் அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகி விடவே பல இயக்குனர்களிடமும் ரஜினி கதை கேட்டார். அதில், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்தான் ரஜினி நடிக்க போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் இயக்குனர் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும், இந்த படத்தில் ரஜினி டைலராக நடிப்பதாகவும், இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் திரைப்படம் எனவும் சொல்லப்பட்டது. படத்தின் போஸ்டரையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டது. தற்போது படம் தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்வர்த்தி விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. தலைவர் 173 படத்திலிருந்து என்ன காரணத்திற்காக சிபி சக்ரவர்த்தி விலகினார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.