பிச்சைக்காரன் 3 படத்தின் அப்டேட்!

09.02.2026 14:07:01

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதன்பின், 2023ஆம் ஆண்டு பிச்சைக்காரன் 2 படம் வெளிவந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் பிச்சைக்காரன் 3 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிச்சைக்காரன் 3 படம் குறித்தும், அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது குறித்தும் விஜய் ஆண்டனி பேசியுள்ளார். இதில், "பிச்சைக்காரன் 3 படம் வருது, பயங்கரமா இருக்கும். பிச்சைக்காரன் 2 படத்தை விட பெருசா, கேஜிஎப் மாதிரி இருக்கும்னு நினைச்சுக்கோங்க" என கூறியுள்ளார்.