பெரும்போகத்திற்கான உர விநியோகம் ஆரம்பம்

13.10.2021 06:13:31

நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.