4 நாட்களில் 28.3 கோடி வசூல்!.

24.03.2026 08:31:40

காமெடி நடிகர் கருணாஸின் மகன் கென். அசுரன், வாரிசு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார்

கென்னுக்கு நடிகராக வேண்டும் என்பதை விட இயக்குனராவதில் அதிக விருப்பம். எனவே இளசுகளுக்கு ஏற்றபடி ஒரு கதையை உருவாக்கி படத்தை இயக்கியும் முடித்தார்.
அப்படி வெளியான யூத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் கொடுத்த இசை இளசுகளை கவர்ந்திருக்கிறது
. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் 28.3 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.