விரைவில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள்!
|
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன. அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன. எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். |
|
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 54இ000 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் தீவிரமாகத் தொடர்ந்ததால்இ மொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 226பில்லியன் ரூபாவை (22600 கோடி ரூபா) எட்டியுள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பெரும்பாலும் கடல் எல்லைகளிலேயே இவை முறியடிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் வலையமைப்பை ஒழிப்பதற்காகத் தகவலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படிஇ கடத்தல்காரர்கள் பற்றிய விபரங்களை வழங்கிய பொதுமக்கள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்ட பொலிஸார் இ கடற்படையினருக்கு 785 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை பணப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அவ்வாறான நடவடிக்கைகளினால் தான் தற்போது நெத்தலி மீன்களும், சுறாக்களும் அகப்படுகின்றன. கடந்த காலங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் பாவனையாளர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டார்கள்.ஆனால் தற்போது பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாளக்கு குழுக்களுடன் தொடர்புக் கொண்டிருந்த அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இதுவே முறைமை மாற்றமாகும் என்றார். |