இலங்கைக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!

07.02.2024 15:22:33

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால், கைதுசெய்யப்பட்டமையைக்  கண்டித்து இன்று ராமேஸ்வர மீனவர்களால் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த

மீனவர்கள் 23 பேரையும் யாழ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது  அவர்களை எதிர்வரும்  14 ஆம் திகதி வரை  சிறையில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த  23 மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தை இராமேஸ்வர மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.