நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அவரைத் தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் விருப்பம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
 

அதிலும் தனுஷ் இதில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவரின் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. சமீப காலமாகவே தொடர்ந்து அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.

ஒரு பக்கம் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் டெல்லி சென்று அங்கு சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர் சிலரை சந்தித்து பேசியதாக சொல்லப்பட்டது. அதேபோல் தனது பெண் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த காமாட்சி விளக்க்கில் தாமரை சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே தனுசுக்கு பின்னால் பாஜக இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவானது.

இந்நிலையில் நேற்று ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் பேசிய தனுஷ் ‘அவரை இவர்கள் இயக்குகிறார்கள்.. இவர் பின்னாடி அவர்கள் இருக்கிறார்கள் என சிலர் பேசுகிறார்கள்.. என் பக்கம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன் மட்டுமே.. என் பின்னால் இருப்பது ரசிகர்கள்தான்.. என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள்.. எண்ணம் போல் வாழ்க்கை’ என பேசியிருக்கிறார்.