பிரான்ஸின் கலேஸ் கால்வாயில் படகு விபத்து

25.11.2021 05:35:22

பிரித்தானியாவுக்கு ஏதிலிகளாக செல்ல முற்பட்ட நிலையில் பிரான்ஸின் கலேஸ் (Calais) அருகே உள்ள கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.

பலர் காணாமல் போயுள்ள நிலையில், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் இணைந்து ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்திற்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் தமது கவலையை வெளியிட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னரான தரவுகளின் அடிப்படையில் அதிகளவான ஏதிலிகளின் உயிரிழப்பு இதுவாகும் என ஏதிலிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.