ராஜ்கிரணுக்கு முன் ஜாமீன்!.

28.09.2026 08:47:05

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நடித்து வருபவர் ராஜ்கிரண். துவக்கத்தில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மறினார். அதேநேரம், கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல் நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பார்.

மற்றபடி பணத்திற்காக அவருக்கு பிடிக்காத எந்த கதாபாத்திரத்திலும் ராஜ்கிரண் நடிக்க மாட்டார் என திரையுலகில் சொல்வதுண்டு. இந்நிலையில்தன், அவரின் மீது ஒரு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. 4 வருடங்களுக்கு முன்பு மீஞ்சூரை சேர்ந்த தயாரிப்பாளர் சரவணன் என்பவர் ராஜ்கிரணுக்கு 40 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த படத்தில் ராஜ்கிரண் நடிக்கவில்லை..

எனவே, அந்த பணத்தை ராஜ்கிரன் தற்போது வரை திரும்ப பெறவில்லை என தயாரிப்பாளர் சரவணன் அளித்த புகாரியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ராஜ்கிரண் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ராஜ்கிரணுக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது.. அதேநேரம் 15 நாட்கள் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி ராஜ்கிரண் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.