இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் - கிளிநொச்சி

18.03.2021 08:59:48

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குறித்த இரத்ததான முகாமில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேன்ர ரணசிங்க கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தார்.

இதேவேளை கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

150க்கு மெற்பட்டவர்கள் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்த வங்கிக்கு குருதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.