
சூரி நடிக்கும் ‘மாமன்’
குடும்ப உறவுகளின் பின்னணியில் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16-ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சூரி வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையமுறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.
அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.