நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி

08.01.2022 13:06:14

தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை (ஜனவரி 9) திருமண விழாவிற்கு செல்ல அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் பத்திரிகையை காண்பித்து தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.