பிரேசிலில் மீண்டும் போராட்டம்..

25.07.2021 11:44:43

தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு எதிராக பல பிரேசிலிய நகரங்களில் நேற்று சனிக்கிழமை போராட்டக்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்ற குற்றச்சாட்டில் அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

போல்சனாரோ தலைமையின் கீழ் 500,000 க்கும் மேற்பட்ட பிரேசிலியர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கொரோனா தொற்றின் தீவிரத்தை நிராகரித்ததற்காகவும், முகக்கவசங்கள் மற்றும் சமூக விலகல் கட்டுப்பாடுகளை எதிர்த்ததாகவும் ஜனாதிபதி பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

இதேவேளை மின்னணு வாக்குப்பதிவு முறையைத் திருத்தாமல் அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடக்காது என பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சு காங்கிரஸ் தலைமைக்கு இந்த வாரம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய தேர்தல் முறையினால் மோசடி இடம்பெறுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போல்சனாரோ பல முறை இந்த பரிந்துரையை முன்வைத்துள்ள போதும் பிரேசில் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.