கச்சதீவினை இலங்கையிடமிருந்து மீட்க நடவடிக்கை !

19.03.2021 09:00:39

இலங்கையிடமிருந்து கச்சதீவினை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் குறித்து பேசப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.