வவுனியாவிலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

30.01.2021 09:04:57

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்று (சனிக்கிழமை) கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19 கோவிஷெல்ட் தடுப்பூசிகள், வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களின் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி, இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டது. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டன.