வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு.
10.11.2025 15:39:33
வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமானது, இன்று (10) காலை பத்து மணி அளவில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலுப்பைக்கடவை
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
மரண விசாரணை
இதன்பின்பு, சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
இந்தநிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.