மொத ராத்தி யை விட டோரதி நல்ல படம்.

28.09.2026 08:45:16

ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமான  மொத ராத்திரி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குநர்  ராஜா கருப்பசாமி  இயக்கிய இப்படத்தில் ரிஷிகாந்துக்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடித்திருந்தார்.
 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த திரைப்படம்,  கிராமத்து திருமணத்தைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டது. படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சிம்பு, தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும்  மொத ராத்திரி படத்தை பாராட்டியிருந்தனர்.

இதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரிஷிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள **‘டோரதி’** திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (செப்டம்பர் 25) திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில்,  டோரதி திரைப்படம் குறித்து பேசியுள்ள மொத ராத்திரி  படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி**,  தனது முந்தைய படத்தைவிட டோரதி சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்  மொத ராத்திரியை விட டோரதி நல்ல படம். இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும்  என்று கூறி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது முதல் படத்தின் கதாநாயகன் ரிஷிகாந்த் தற்போது முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிப்பதை ராஜா கருப்பசாமி பாராட்டியுள்ளார்.