முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தம்புள்ளை அணி !

06.12.2021 16:55:42

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியும் கண்டி வோரியஸ் அணியும் மோதுகின்றது.

சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், தம்புள்ளை அணிக்கு தசுன் சானகவும் கண்டி அணிக்கு அசேல குணரத்னவும் தலைமை தாங்குகின்றனர்.