முதல்வர் விஜய்யின் மாஸ் திட்டம்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது முதல் பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தீவிரமாகத் தயாராகி வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கான இறுதிக்கட்ட பணிகளைச் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் பல முக்கிய இடம்பிடிக்கவுள்ளன. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும், இளைஞர்களைக் குஷிப்படுத்தும் வகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருவாயை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை எந்த தொய்வுமின்றி செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடியான அறிவிப்புகள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை மேலும் பலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.