ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு சிறியளவில் நில அதிர்வு

25.08.2021 08:42:14

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

லுணுகம்வெஹெர மற்றும் தனமல்வில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 9.19-க்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டுச்சுவர்கள் அதிர்ந்ததை உணர முடிந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உணரப்பட்ட நில அதிர்வு, நாட்டிலுள்ள நான்கு கண்காணிப்பு நிலையங்களிலிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் மொனராகலை மாவட்ட கிளையின் அதிகாரிகளும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளும் குறித்த பகுதிகளுக்கு இன்று கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அநுர வல்பொல தெரிவித்தார்