முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்
09.09.2021 09:57:41
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09) உடையார் கட்டு பகுதியை சேர்ந்த 84 வயதுடையவரே மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து மரணமடைந்த நபரை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மரணத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 14 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.