ரஜினிகாந்த் சீமான் திடீர் சந்திப்பு!
22.11.2024 08:14:56
டிகர் ரஜினிகாந்த் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்றுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடன் சந்திப்பு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
இந்த சந்திப்பில் திரையுலகை பற்றியும் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் ரஜினிகாந்த்தும் சீமானும் பேசிக் கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய காலங்களில் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. |