மறைந்த மகா ராணிக்கு' நாடாளுமன்றில் அஞ்சலி!

09.09.2022 10:35:29

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி

மறைந்த பிரித்தானிய மகா ராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு சபையில் கோரியிருந்தார்.

இதனையடுத்து மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நாடாளுமன்றில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலி

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இன்றைய தினம் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இன்று நாடாளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே வருகை தந்ததன் காரணமாக நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.