விஜய் குறித்து சீமான் பேச்சு!
கடந்த சில காலமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து வரும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி லட்சக்கணக்கானோரை கூட்டி நடத்திய முதல் மாநாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல கட்சிகள் த.வெ.கவை விமர்சித்து வருகின்றன. அதில் முக்கியமான கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி. ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான் தற்போது அவரை எதிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவெக கட்சியை விமர்சித்தது குறித்து பேசிய சீமான் “விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் மற்றவர்களுக்குதான் தடுமாற்றம் வந்துள்ளது. எனக்கு இல்லை. எனக்கும் என் தம்பி விஜய்க்கும் அண்ணன், தம்பி உறவில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவரது கோட்பாட்டில் கொள்கையில் சில முரண்பாடுகள் உள்ளன. பாஜக, காங்கிரஸை எதிர்ப்பது போல, தவெகவையும் எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது.
இருமொழி கொள்கை என்கிறார். நாங்கள் தமிழ் மட்டுமே கொள்கை மொழி, ஆங்கிலம் பயன்பாட்டு மொழி என்கிறோம். இதனை ஒரு அண்ணனாக தம்பி விஜய்க்கு சொல்லவேண்டிய கடமை இருக்கிறது” என கூறியுள்ளார்.