தொற்றின் புதிய பிறழ்வு : தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு!

29.12.2020 11:24:33

 

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், உருமாறிய கொரோனாபாதித்தவருடன் தொடர்பில் இருந்த 15பேருக்கு கொரோனா இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.