பாகிஸ்தானில் சீனி ஏற்றுமதிக்கு தடை

12.05.2022 06:05:08

உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சீனி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சீனி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடை என்பது, நாட்டில் அதன் விலையை உயராமல் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.