"உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்" - நீதிபதி உத்தரவு!
04.08.2026 14:22:22
|
கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து செல்கின்றனர். |
|
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கபடுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். |