மண்வெட்டியால் தாக்கி மகளை கொலை செய்த தந்தை
18.08.2021 14:13:22
தனது 33 வயது மகளின் தலையில் மண்வெட்டியால் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டில் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ருக்கட்டனகொட, வடு வெலிவிட்டிய பகுதியில் இந்த சம்பவம் நேற்று(17) இரவு இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தனது மகளின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.
இதனால், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும் தகராறு காரணமாக குடிபோதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.