ஹீரோயின் ஆன பிக் பாஸ் ஜனனி!
07.02.2026 14:08:49
|
இலங்கையை சேர்ந்தவர் ஜனனி. அவர் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். அவர் அதற்கு பிறகு விஜய்யின் லியோ படத்தில் சின்ன ரோல் ஒன்றில் தோன்றி இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. தற்போது ஜனனி ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். |
|
பிக் பாஸ் 9ம் சீசனில் கலந்துகொண்ட பிரஜின் ஹீரோவாக 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ற படத்தில் நடிக்கிறார். அதில் ஹீரோயினாக ஜனனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஜய் டிவி புகழ் காமெடியனாக நடிக்கிறாராம். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் அதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். பிரஜின் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |