கைரேகை இயந்திரங்கள் அறிமுகம்.

08.10.2025 09:00:23

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் தபால் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் ஏற்கனவே கைரேகை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாகாண அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்களுக்கும் இந்த அமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதுடன் கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கை அறிக்கைகளில் செய்யப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இருப்பினும், பல தபால் தொழிற்சங்கங்கள் சமீபத்தில் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்களை நிறுவுவதை எதிர்த்தும், அதனுடன் தொடர்புடைய பிற குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.