ஹாலிவுட் படத்தில் சுருதிஹாசன்

22.10.2022 15:58:15

சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கிறார். தற்போது கே.ஜி.எப். டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் படங்களிலும் நடிக்கிறார். இந்தியிலும் சில படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க சுருதிஹாசனுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இது சைக்கலாஜிக்கல் திகில் படமாக உருவாகிறது. இந்த படத்தை டாப்னே ஷ்மோன் டைரக்டு செய்கிறார். இதில் தி லாஸ்ட் கிங்டம் படத்தில் நடித்து பிரபலமான மார்க் ரோலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 1980-கள் கால கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்ட கதையம்சத்தில் தயாராகிறது. படப்பிடிப்பு ஏதென்ஸ் மற்றும் கோர்புவில் நடக்கிறது. இந்த படத்தில் நடிப்பதை சுருதிஹாசன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.