பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன் உக்ரைனுக்கு விஜயம்!

23.01.2023 22:07:36

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன், உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நகரின் புறநகர் பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசனை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் மற்ற உக்ரைனிய அமைச்சர்கள் வரவேற்றனர்.

ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் நாட்டிற்குச் செல்வது ஒரு பாக்கியம் என பொரிஸ் ஜோசன், கூறினார்.

முன்னாள் பிரதமரின் தனிப்பட்ட நிதி தொடர்பான புதிய கேள்விகள் பிரித்தானியாவில் எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு இல்லாத விஜயம் வந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிவ்வின் வடமேற்கில் உள்ள புச்சா மற்றும் போரோடியங்கா நகரங்களையும் அவர் பார்வையிட்டார்.

‘உக்ரைனின் உண்மையான நண்பரான பொரிஸ் ஜோன்சனை நான் வரவேற்கிறேன். உங்கள் ஆதரவுக்கு பொரிஸ் நன்றி’ டெலிகிராமில் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

பொரிஸ் இதன்போது கூறுகையில், ‘உக்ரைன் மக்களின் துன்பம் நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, உக்ரைன் வெல்வது முடிந்தவரை விரைவாக வெற்றி பெறுவதுதான்.

இது இரட்டிப்பாக்க வேண்டிய தருணம், மேலும் உக்ரைனியர்களுக்கு வேலையை முடிக்க தேவையான அனைத்து கருவிகளையும் கொடுக்க வேண்டும். புடின் எவ்வளவு விரைவில் தோல்வியடைகிறாரோ, அவ்வளவு சிறந்தது உக்ரைனுக்கும் முழு உலகத்திற்கும்’ என கூறினார்.

ஜேர்மனி உட்பட உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிற்கு அதிகமான இராணுவ டாங்கிகளை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜோன்சனின் வருகை வந்துள்ளது.