இரத்தக் காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

25.10.2021 04:05:17

பதுளை மாவட்டம், பண்டாரவளையின் இருவேறு பகுதிகளில் இரத்தக் காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இருவரின் சடலங்கள் கிடக்கின்றன என்று பண்டாரவளை காவல் நிலையத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அதற்கமைய பண்டாரவளை – நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அதேபோன்று பண்டாரவளை – மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு சடலங்களும் இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டன. சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்” – என்றார்.