காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
|
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மைசூரில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 2,284 அடி ஆகும். தற்போது நீர்மட்டம் 2,281 அடியை எட்டியுள்ளது. மேலும், அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்திற்கும் கனஅடிக்கு மேற்பட்ட நீர் வந்து கொண்டிருக்கிறது. |
|
இந்நிலையில், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று (01.08.2026) இரவு 10 மணிக்குப் பிறகு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கபட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மற்றொருபுறம் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட இந்த உபரி நீர் இன்று (02.08.2026) அல்லது நாளைக்குள் தமிழ்நாட்டின் எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், இன்றும் அணையிலிருந்து மேலும் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |