CM விஜய்யை சந்தித்த RJ பாலாஜி!

05.06.2026 07:52:11

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த கருப்பு படம் தியேட்டர்களில் வசூலை வாரி குவித்து வருகிறது. 300 கோடியை கடந்து வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என டெக்னீசியன்களுக்கு சூர்யா சொகுசு காரை பரிசாக அளித்து இருந்தார்.

  

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை RJ பாலாஜி சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் அவர் "கருப்பு படம் தொடங்கியதே இவரிடம் இருந்து தான்" என கூறி உள்ளார்.

"வாவ்.. அவரை முதலமைச்சராக பார்த்தது நம்பவே முடியாத ஒரு தருணமாக இருந்தது. அதே அன்பு, பணிவு மற்றும் அமைதி. அனைத்திற்கும் நன்றி அன்பான விஜய் சார்" என RJ பாலாஜி பதிவிட்டுள்ளார்.