எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு

03.08.2021 12:00:00

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் லக்மால் கோணார தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 19 சுகாதாரப் பிரிவுகளில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்மடுல்ல, நிவித்திகல, கலவான, கிரிஎல்ல மற்றும் எல்பாத ஆகிய பொதுசுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் எலிக்காய்ச்சல் மரணங்கள் 5 பதிவாகியுள்ளன.

கடந்த வருடமும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகம் இனங்காணப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டமே முன்னிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்