சிறிலங்காவுக்கு அமெரிக்கா கடுமையான செய்தி - தமிழ் அமைப்புகள் வரவேற்பு
11.12.2021 17:21:08
அனைத்துலக மனித உரிமை நாளில் சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு பயணத்தடை விதித்ததன் மூலம் அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை சொல்லியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா சீனா, பெலாரஸ், உகாண்டா, பங்களாதேஷ், மற்றும் மெக்ஸிகோவை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு தடைகளை அறிவித்த அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அன்ரனி பிளிங்கன் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் மையத்தில் மனித உரிமைகளை வைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது பொறுப்புக்கூறல் கோரப்படும் எனவும் அவர் சிறிலங்காவின் பெயரை நேரடியாக கூறாமல் கருத்து தெரிவித்திருந்தார்.