சுவிட்சர்லாந்து அரசாங்கம் 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை இலங்கைக்கு வழங்கிவைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை இலங்கைக்கு வழங்கிவைத்துள்ளது.
அத்துடன் இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இந்நன்கொடை தொடர்பில் சுவிட்சர்லாந்து மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் வலுவான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
இலங்கை - சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்பு சங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியம், கடந்த காலங்களில் இரு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வெற்றிகரமாக காணப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.