2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்"

23.09.2025 08:12:23

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட்டம் கூடி வருகிறது. இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. கொள்கை கூட்டம் - ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் விவாதித்து வருகின்றனர்.

அரசியலில் பலரும் விஜயகாந்த், சிரஞ்சீவி, சரத்குமார், கமல் என எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் சந்தேகம் என்று மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவினரும் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி தங்கள் கூட்டத்தையும், பலத்தையும் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

அவ்வகையில் திமுக 'ஓரணியில் தமிழ்நாடு', 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ஆர்.கே.நகர், விருதாச்சலம், காஞ்சிபுரம், விருதுநகர் எனப் பல்வேறு தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!" என்று கூறியிருக்கிறார்.

'யார் பெருசுனு அடுச்சுக் காட்டு' என போட்டா போட்டியாக நடந்து வரும் கூட்டம் சேர்க்கும் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களின் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.