சென்னையில் கடுமையான வெப்பம் மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெப்ப அளவு மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னை: Powered By PauseUnmute Loaded: 0.67% Fullscreen தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கேரளம், கா்நாடகத்தில் குறைந்துள்ளது. மேலும், கடல் காற்று திசை மாற்றம் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெப்பம் நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெப்ப அளவு மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவை விட அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக மதுரையில் 106.88 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது