விடுதலைப் புலிகள் மீதான தடை அறமற்ற செயல்

15.05.2024 14:27:03

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் நீடிக்கப்பட்ட தடையானது நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் இந்த தடை உத்தரவின் மூலம் இந்திய அரசாங்கம் சீனாவிற்கே பாரிய அனுகூலத்தினை வழங்கியுள்ளதாக இயக்குநர் கௌதமன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ள செயல் என்பது அறமற்ற ஒரு செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடையே இதுவென இந்தியா உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் இயக்குநர் கௌதமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் வல்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி தடை நிக்கியுள்ளதாக இயக்குநர் கௌதமன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடந்து முடிந்து, 15 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்த காலப்பகுதியில் இந்தியாவிலோ அல்லது உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலோ விடுதலைப்புலிகள் அமைப்பினால் சிறியதொரு அசம்பாவிதம் கூட நடக்காத நிலையில் தமிழ் நாட்டின் மீது பழியினைப் போட்டு இந்திய அரசாங்கம் இந்த தடையினை நீடித்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் தங்களது தாய்நாடு தமிழீழம் என்றும் தந்தையர் நாடு இந்தியா என்றும் கூறி பெருமையுடன் வாழ்ந்து வருவதாக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.