வவுனியாவில் மேலும் 76 பேருக்கு கொரோனா!

10.08.2021 07:57:20

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.