தாக்குதலை மேற்கொண்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

30.05.2024 14:35:15

யாழ் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி தாக்குதலில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான குறித்த நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை ஆராயப்பட்டது.

இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஆகியோரிடம் அது குறித்து விளக்கம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தபின் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி,
“வைத்தியசாலைக்கு நாளாந்தம் குறைந்தது 5ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அவசர நோயாளர் பிரிவுக்கு பல்வேறு அவசர உயிர் காப்பு தேவை கருதி வருவதுண்டு.

அதுமட்டுமல்லாது இவ்வாறு வருபவர்கள் பலவகையான வாகனங்களில் வருகை தருவதால் உயிரப் பாதுகாப்பை கருதி தடையின்றி உள்ளே அனுமதிப்பது வழமை.

அந்த இளக்கமான நடைமுறையை தமக்கு சாதகமாக ஒருசிலர் பயன்படுத்துவதால்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

அதேநேரம் இவ்வாறான சம்பவங்களை வைத்து அவசர நோயாளர் பிரிவு நுழைவாயிலில் இறுக்கமான நடைறையை கொண்டு வரவும் முடியாது.