இராஜதந்திர முறுகல் !

26.11.2021 16:00:00

ஆங்கில கால்வாய் ஊடாக தமது நாட்டுக்குள் பிரவேசித்த, புகலிடக் கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மீள அழைக்க வேண்டும் என்ற பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் சமூக வலைத்தளம் ஊடாக இந்தக் கருத்தினைப் பகிர்ந்திருப்பதன் ஊடாக மரணித்த 27 புகலிடக் கோரிக்கையாளர்களின் விடயத்தின் தீவிரத்தன்மையினை அவர் புரிந்து கொள்ளவில்லை எனவும், இம்மனுவல் மக்ரோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பிரான்ஸ் தலைமையில் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியன பேச்சுக்களில் ஈடுபடவுள்ளன.

ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரித்தானியாவிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அதனை பிரான்ஸ் மீளப் பெற்றுள்ளமையினால் மேலும் இராஜதந்திர ரீதியான முறுகல்கள் உருவாகியுள்ளன.