ஔடத தரவுகள் மாயம்; சீ.ஐ.டியில் முறைப்பாடு
31.08.2021 05:35:14
தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (30) காலை முறைப்பாடு வழங்கினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் தரவுகள் காணாமல் போனது குறித்து விரிவான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவுமே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.