ஹைதராபாத்துடன் பலப்பரீட்சை நடாத்துகின்றது சென்னை
28.04.2021 11:34:04
ஐ.பி.எல் தொடரின் 23வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்று(புதன்கிழமை) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.
ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன.
இதில் சென்னை 9 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பெற்றுள்ளன.