இலங்கை தேசிய கொடி தரை விரிப்புகள் மற்றும் பாதணிகளில் - பலரும் கண்டனம் !
12.03.2021 09:36:42
இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட தரை விரிப்புகள் மற்றும் பாதணிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
உலகின் முன்னணி இணையத்தள பொருள் விற்பனை தளமான amazon இல் இவ்வாறு இலங்கை கொடியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தரை விரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தரைவிரிப்பு, 12 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், இலங்கையின் தேசிய கொடியுடனான தரைவிரிப்புக்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.